ஜி.வி.பிரகாஷின் ‘அடங்காதே’ புதிய தகவல்!

ஜி.வி.பிரகாஷ், சரத்குமார் இணைந்து நடிக்கும் ‘அடங்காதே’ டப்பிங் வேலைகள் துவங்கியது!

செய்திகள் 28-Jul-2018 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் M.S.சரவணன் தயாரிக்கும் படம் ‘அடங்காதே’. சண்முகம் முத்துசுவாமி இயக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும், சுரபி கதாநாயகியாகவும் நடிக்க, சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகை மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இப்படத்தின் டப்பிங் வேலைகள் நேற்று துவங்கியது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்த படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்! இந்த படத்தின் ஒளிப்பதிவை பி.கே.வர்மா கவனிக்க, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படம் தவிர, ‘4G’, ‘ஐங்கரன்’, ‘சர்வம் தாளமயம்’, ‘100% காதல்’ என பல படங்கள் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#GVPrakash #Adangathey

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;