ஆயுதபூஜை மற்றும் ஜோதிகா பிறந்த நாளில் ‘காற்றின் மொழி’

ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 30-Jul-2018 11:23 AM IST VRC கருத்துக்கள்

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மோகன்ராம், குமரவேல் முதலானோர் நடிக்கும் படம் ‘காற்றின் மொழி’. ‘பாஃப்டா’ நிறுவனம் சார்பில் தனஞ்சயன் தயாரிக்கும் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் நேற்று முன் தினத்துடன் (28-8-18) முடிவடைந்தது. இதனை தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை துவங்கியுள்ள படக்குழுவினர் இப்படத்திற்கான ரிலீஸ் தேதியையும் முறைப்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரிடமிருந்து பெற்றுக் கொண்டனர். ‘காற்றின் மொழி’ திரைப்படத்தை வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய தமிழ் திரைப்பட வெளியீட்டு ஒழுங்கு கூழுவினர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். அக்டோபர் 18-ஆம் தேதி ஜோதிகா பிறந்த நாள் என்பதுடன் ஆயுதபூஜை விடுமுறையும் கூட! ஜோதிகாவின் பிறந்த நாள் மற்றும் ஆயுத பூஜை என இரண்டு விசேஷமான நாளில் ‘காற்றின் மொழி’ வெளியாகவிருப்பது ஜோதிகாவின் ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. இதே அக்டோபர்-18-ல் விஷாலின் ‘சண்டகோழி-2’ திரைப்படமும் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#Jyothika #KaatrinMozhi #RadhaMohan #Vidarth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிமிக்கி கம்மல் வீடியோ பாடல் - ஜோதிகா - காற்றின் மொழி


;