நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ முக்கிய தகவல்!

நயன்தாரா, அதர்வா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்திற்கு U/A சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 18-Aug-2018 12:24 PM IST VRC கருத்துக்கள்

‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. இப்படத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யாப், ராஷிகண்ணா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, விஜய்சேதுபதி ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ள இப்படத்தை ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.ஜெ.ஜெயகுமார் தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு வருட கால தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் சென்சார் காட்சி சமீபத்தில் நடைபெற்றது, இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இப்படத்திற்கு U/A சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனால் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த படத்தை தன் பெற்றோர்கள் கூடவே வந்து பாரக்க முடியும்!

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்துள்ளார். இந்த படத்தை இம்மாதம் 30-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படம் வெளியாகி இரண்டு வார இடைவெளியில் அவரது இன்னொரு படமான இமைக்கா நொடிகளும் வெளியாகவிருப்பது நயன்தாரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்!

#Nayanthara #Atharva #AnuragKashyap #AjayGnanamuthu #ImaikkaNodigal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 டீஸர்


;