ரிலீசுக்கு தயாராகி வரும் பிரசாந்தின் ‘ஜானி’

அறிமுக இயக்குனர் வெற்றி செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் ‘ஜானி’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது!

செய்திகள் 27-Aug-2018 4:43 PM IST VRC கருத்துக்கள்

‘சாகசம்’ படத்திற்கு பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஜானி’. மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜானி’ படத்தின் டைட்டில் உரிமையை வாங்கி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை ‘ஸ்டார் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் தியாகராஜன் தயாரித்துள்ளார். இயக்குனர்கள் எஸ்.ஜே.சூர்யா, ஜீவா சங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பி.வெற்றிசெல்வன் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் பிரசாந்துடன் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷினி, சந்தியா உட்பட பலர் நடித்துள்ளனர். இன்று காலை இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ள நிலையில் ‘ஜானி’ படக்குழுவினர் மீடியாவை சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

அப்போது இந்த படம் குறித்து இயக்குனர் வெற்றி செல்வன் பேசும்போது, ‘‘ஒரு சில சமூக கருத்துக்களையும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மாதிரியும் அமைந்துள்ள கதைக்களத்தை கொண்ட இந்த படம் ஒரு அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ளது. பிரசாந்த் நடிக்கும் படம் என்றால் அதில் டான்ஸ், ஃபைட், காமெடி என்று எல்லா கமர்ஷியல் விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். ஆனால் இப்படத்தில் பாடல்கள் இல்லை. இந்த கதையில் பாடல்களுக்கான இடம் இல்லாததால் பாடல்களை தவிரித்திருக்கிறோம். ‘ஜானி’ பிரசாந்துக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் பேசும்போது, ‘‘அனைத்து படப்பிடிப்பு வேலைகளும், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் முடிவடைந்த ‘ஜானி’ விரைவில் சென்சார் குழுவினர் பார்வைக்கு செல்லவிருக்கிறது. சென்சார் முடிந்ததும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும். கலை இயக்கத்துக்கு மிலன், ஒளிப்பதிவுக்கு பன்னீர் செல்வம், சண்டை பயிற்சிக்கு சுப்ரீம் சுந்தர் என்று பல முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ள ‘ஜானி’ அனைவருக்குமான படமாக அமைந்துள்ளது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜானி ட்ரைலர்


;