நயன்தாரா பட காட்சிகள் குறைப்பு!

‘இமைக்கா நொடிகள்’ படத்திலிருந்து 7 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டது!

செய்திகள் 3-Sep-2018 11:21 AM IST VRC கருத்துக்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘இமைக்கா நொடிகள்’. இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றாலும் சில விமர்சகர்களும், ரசிகர்களும் இப்படத்தின் ரன்னிங் டைம் மிக மிக அதிகம் என்றும், தேவையில்லாத சில காட்சிகளை குறைத்து படத்தை ‘ட்ரிம்’ பண்ணினால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இது போன்ற கருத்துக்கள் வெளியானதாலோ என்னவோ ‘இமைக்கா நொடிகள்’ படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க படக்குழுவினர் முடிவு செய்து இப்போது அந்த வேலைகள் நடைபெற்று வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்த தகவலின் படி ‘இமைக்கா நொடிகள்’ படத்திலிருந்து 7 நிமிட காட்சிகளை நீக்கி விட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்!

#ImaikkaNodigal #Nayanthara #Atharvaa #AnuragKashyap #RaashiKhanna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அடங்கமறு Trailer


;