‘சீமராஜா’ - தமிழ் மன்னன் குறித்து சிவகார்த்திகேயன்!

‘சிமராஜா’ படத்தில் தமிழ் மன்னனாக நடித்ததில் பெருமைப்படும் சிவகார்த்திகேயன்!

செய்திகள் 3-Sep-2018 1:52 PM IST VRC கருத்துக்கள்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், லால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படம் வருகிற 13-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தின் டிரைலர் வெளியீட்டும், பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது,

‘‘இந்த படத்தில் நான் ஒரு தமிழ் மன்னனாக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். இந்த படத்தின் ட்ரைலரின் கடைசி 3 காட்சிகளை பார்த்து சமூக வலைத்தளங்களில் ‘பாகுபலி’ படம் மாதிரி இருக்கிறது என்று பாராட்டியிருந்தனர். அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். ‘ரஜினி முருகன்’ படத்தின்போதே இந்த கதை பற்றி நானும் பொன்ராம் சாரும் பேயிருந்தோம்! இந்த படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதனால் இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் ரத்தம் தெறிக்கும் விதமான வன்முறைகள் இடம் பெற்றிருக்காது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களை விட இந்த படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் குழந்தைகள் முதற்கொண்டு அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.

நான் நடிக்க வந்ததிலிருந்து எனக்கு எல்லோரும் நல்ல ஒத்துழைப்பும், ஆதரவும் தந்து வருகிறார்கள்! குறிப்பாக மீடியாகாரர்கள் எனக்கு ரொம்பவும் சப்போர்ட்டாக இருக்கிறார்கள். அதற்கு அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிரேன். சினிமாவை பொறுத்தவரையில் நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. அதே நேரம் நான் யாரை பார்த்தும் பயப்படுவதும் இல்லை, பொறாமைப்படுவதும் இல்லை! சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்!

‘சீமராஜா’வை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு வேலைகளும் இப்போது நடந்து வருகிறது!

#Seemaraja #SivaKarthikeyan #Samantha #Soori #PonRam #Simran #Napolean

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;