‘அட்டகத்தி’ தினேஷுக்கு மாமியாரானார் தேவயானி!

‘களவாணி’ மாப்பிளை படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷுக்கு மாமியாராக நடிக்கிறார் தேவயானி!

செய்திகள் 11-Sep-2018 10:54 AM IST VRC கருத்துக்கள்

‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க, அதிதி மேனன் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘களவாணி மாப்பிள்ளை’. ‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ‘கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’ உட்பட 16 வெற்றிப் படங்களை தயாரித்த ‘ராஜபுஷ்பா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு பிறகு தயாரித்துள்ள படம் இது. இந்த படங்களை இயக்கி, தயாரித்த மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இயக்கியுள்ள ‘களவாணி மாப்பிள்ளை’யில் தினேஷ், ஆதிதி மேனனுடன் ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், கிரேன் மனோகர் உட்பட பலர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் காந்தி மணிவாசகம் கூறும்போது,

‘‘என் அப்பா மணிவாசகம் இயக்கும் படம் என்றால் அதில் ஒரு பார்முலா வைத்திருப்பார். மெலிதான கதையில் நிறைய காமெடி வைத்திருப்பார். அதனால் அவர் இயக்கிய பெரும்பாலான படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது. ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் நானும் அதைதான் பின் பற்றியிருக்கிறேன். வழக்கமாக மாமியார், மருமகள் கதைகள் தான் சினிமாவில் வந்திருக்கிறது. அதிகமாக ஜெயித்தும் இருக்கிறது. ஆனால் மாமியார், மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போலதான் வரும்! அந்த வரிசையில் உருவாகியுள்ள படம்தான் ‘களவாணி மாப்பிள்ளை’. இந்த படத்தில் தினேஷுக்கு மாமியாராக தேவயானி மேடம் நடித்துள்ளார். மாமியார் கேரக்டர் என்றதும் முதலில் அவர் நடிக்க தயங்கினார். ஆனால் முழு கதையை கேட்டதும் உடவே நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த அளவுக்கு மாமியார், மருமகன் பிரச்சனைகளை இப்படத்தில் கையாண்டிருக்கிறோம். இப்படம் ஜாலியான பொழுதுபோக்கு படமாக இருக்கும்’’ என்றார்.

விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை சரவணன் அபிமன்யு கவனித்திருக்க, பொன் கதிரேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை மாயா பாண்டி செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;