‘ஜெயம்’ ரவியின் மற்றுமொரு பட அறிவிப்பு!

அறிமுக இயக்குனர்  பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க, வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம்!

செய்திகள் 11-Sep-2018 11:20 AM IST VRC கருத்துக்கள்

இப்போது ‘அடங்க மறு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ‘ஜெயம்’ ரவி. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன் ராஜா இயக்க, ’ஜெயம்’ ரவி நடிக்க ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜாவும், ‘ஜெயம்’ ரவியும் இணைந்து ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டிருந்தனர். ‘அடங்க மறு’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி, ‘தனி ஒருவன்-2’வில் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் ‘ஜெயம்’ ரவி நடிப்பில் உருவாக இருக்கும் மற்றொரு படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று ‘ஜெயம்’ ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ‘ஜெயம்’ ரவி கதாநாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருக்கிறது என்றும் இந்த படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் என்றும் ஒரு வீடியோ பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவில் பிரபல கதாநாயகி, பிரபல இசை அமைப்பாளர் என்று இப்படத்தில் பல பிரபலங்கள் பங்குபெற இருக்கிறார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அத்துடன் இது ‘ஜெயம்’ ரவியின் 24-வது படம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ‘ஜெயம்’ ரவி இதுவரை நடித்துள்ள படங்களின் பட்டியலை எடுத்து பார்த்தால் 24-வது படம் என்பதில் சில குளறுபடிகள் இருப்பதாக தெரிகிறது. இதனால் ‘அடங்க மறு’ படத்தை தொடர்ந்து ஜெயம் நடிக்கும் படம் இதுவாகதான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

#JayamRavi #JR24 #VelsFilmInternational #Pradeep

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆடை ட்ரைலர்


;