‘செக்கச் சிவந்த வானம்’ புதிய ரிலீஸ் தேதி!

ஒரு நாள் முன்னதாக, இம்மாதம் 27-ஆம் தேதி வெளியாகிறது மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’

செய்திகள் 11-Sep-2018 12:37 PM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் இறுதிகட்ட வேலகள் இப்போது படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘செக்க சிவந்த வானம்’ இம்மாதம் (செப்டம்பர்) 28-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்கள். ஆனால் இப்போது ஒரு நாள் முன்னதாக அதாவது செப்டம்பர் 27-ஆம் தேதி ‘செக்க சிவந்த வானம்’ படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ் என பல பிரபலங்கல் நடித்திருக்கிறார்கள். ஏ.அர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இவரது இசையில் சமீபத்தில் வெளியான ‘பூமி… பூமி…’ என்ற பாடலும் ‘மழை குருவி…’ என்று துவங்கும் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. சமீபகாலமாக பல படங்கள் வியாழக் கிழமைகளில் வெளியாகி வரும் நிலையில் இப்போது மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படமும் வியாழ கிழமை வெளியாகவிருக்கிறது.

#ChekkaChivanthaVaanam #CCV #STR #VijaySethupathi #AravindSamy #ArRahman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;