ஜோதிகாவின் புதிய பட அறிவிப்பு!

அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு!

செய்திகள் 11-Sep-2018 5:36 PM IST VRC கருத்துக்கள்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் படம் ‘NGK’. செல்வராகவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் ஒரு படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இப்போது வெளியிட்டுள்ளது.

‘NGK’யை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜோதிகா நடிக்கிறார் என்றும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்குகிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்த புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களைப் போலவே இந்த படமும் கதாநாயகியை மையப்படுத்திய கதை அமைப்பை கொண்ட படமாம். இந்த படத்தில் ஜோதிகாவுடன் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது!

#Jyothika #Jyotika #DreamWarriorPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிமிக்கி கம்மல் வீடியோ பாடல் - ஜோதிகா - காற்றின் மொழி


;