ஒரு வார இடைவெளியில் விஜய்சேதுபதியின் 2 படங்கள்

விஜய்சேதுபதியின்  ‘செக்கச் சிவந்த வானம்’ இம்மாதம் 27-ஆம் தேதியும், ‘96’ அக்டோபர் 4-ஆம் தேதியும் வெளியாகிறது!

செய்திகள் 11-Sep-2018 7:05 PM IST Top 10 கருத்துக்கள்

விஜய்சேதுபதி, த்ரிஷா முதன் முதலாக இணைந்து நடித்துள்ள படம் ‘96’. இந்த படத்தை ‘ரோமியோ ஜூலியட்’, ‘கத்திச் சண்டை’ ஆகிய படங்களை தயாரித்த ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்க பிரேம் குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் மேனன் இசை அமைத்துள்ளார். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே அதிக லொகேஷன்களில் படமாக்கப்பட்ட இது என்று கூறப்படுகிறது. அனைத்து வேலைகளும் முடிவடைந்த இந்த படத்தை முதலில் விநாயக சதுர்த்திக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் ஒருசில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது கிடைத்துள்ள தகவலின் படி ‘96’ படத்தை அக்டோபர் 4-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்றும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார்கள் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ இம்மாதம் 27-ஆம் தேதி வெளியாகிறது. 27-ஆம் தேதியை தொடர்ந்து ஒரு வார இடைவெளியில் விஜய்சேதுபதியின் ‘96’ திரைப்படமும் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்!

#VijaySethupathi #Chinmayi #PremKumar #GovindVasantha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;