தியேட்டரில், ‘2.0’ 3D டீஸரை இலவசமாக பார்க்க ஏற்பாடு!

‘2.0’ 3D தியேட்டரில் இலவசமாக பார்க்க இயக்குனர் ஷங்கர் ஏற்பாடு!

செய்திகள் 12-Sep-2018 11:37 AM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள இந்த படம் நவம்பர் மாதம் 29-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு நாளை வெளியாகவிருக்கிறது. ‘2.0’ திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருப்பதால் படத்தின் டீஸரை 3D தொழில்நுட்பத்திலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். 3D தொழிப்பத்தில் வெளியாகும் இந்த டீஸரை பார்க்க வேண்டுமானால் அதற்கான பிரத்தியேக கண்ணாடி திரை போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் தேவைப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இந்த டீஸரை இலவசமாக தியேட்டர்களில் பார்த்து மகிழ்வதற்காக இயக்குனர் ஷங்கர் புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளார். அதன்படி ‘2.0’ படத்தின் டீஸரை சென்னையிலுள்ள பி.வி.ஆர். மற்றும் சத்யம் திரையரங்குகளில் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு +91 9099949466 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், ‘2.0’ டீஸரை தியேட்டரில் இலவசமாக பார்க்கலாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஷங்கரின் இந்த புதிய முயற்சி இந்திய திரையுலகில் முதன் முறையானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சிக்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.0 படத்தின் டீஸர் வழக்கமாக வெளியாகும் டீஸரை போலவும், மற்றும் 2D, 3D ஆகிய தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது.

#2Point0 #Rajinikanth #AkshayKumar #Shankar #ARRahman #LycaProductions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கழுகு 2 - டீஸர்


;