‘NOTA’வில் இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ்!

‘NOTA’வில் தனது குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸை நடிக்க வைத்த இயக்குனர் ஆனந்த் சங்கர்!

செய்திகள் 12-Sep-2018 11:42 AM IST VRC கருத்துக்கள்

‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து ஆனந்த் சங்கர் இயக்கி வரும் படம் ‘NOTA’. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ படப் புகழ் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், மெஹ்ரீன் பிரசித்தா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஒரு கெஸ்ட் ரோலில் தனது குருநாதரான ஏ.ஆர்.முருகதாஸை நடிக்க வைத்துள்ளார் ஆனந்த் சங்கர். இது குறித்து ஆனந்த் சங்கர் "What a pleasurable moment! I was the director for my director who was today, the actor 😬 #NOTA" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இதற்கு முன் தான் இயக்கிய, தான் தயாரித்த படங்களில் மட்டுமே நடிகராக தலை காட்டியுள்ளார். இப்போது முதன் முதலாக தனது சிஷ்யர் இயத்தில் நடித்துள்ளார்.

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகும் இந்த ‘NOTA’ அரசியில் கலந்த ஜனரஞ்சக படமாக உருவாகி வருகிறது.

#NOTA #ARMurugadoss #AnandShankar #VijayDeverakonda #MehreenPirzada

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NOTA Trailer


;