ஒரே நாளில் 25 மில்லியன் வியூஸ்!

25 மில்லியன் பார்வையிடல்களுக்கும் மேல் கிடைத்து சாதனை படைத்த ரஜினியின்‘2.0’ டீஸர்!

செய்திகள் 14-Sep-2018 11:21 AM IST VRC கருத்துக்கள்

ரஜினி, ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘2.0’ நவம்பர் 29-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்தின் டீஸர் நேற்று காலை 9 மணிக்கு வெளியானது! 2D தவிர 3D தொழில்நுட்பத்திலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள்து. நேற்று காலை 9 மணிக்கு தமிழில் வெளியான ’2.0’ டீஸர் 24 மணிநேரத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்களின் பார்வையிடல்கள் கிடைத்து பெரும் சாதனை படைத்துள்ளது. ஹிந்தியில் வெளியாகிய டீஸரும் 24 மணிநேரத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ‘2.0’ டீஸரை பார்வையிட்டுள்ளனர். ஆனால் தெலுங்கு மொழியில் வெளியான டீஸருக்கு தமிழ், ஹிந்தியில் வெளியாகிய டீஸர்களுக்கு கிடைத்த வரவேற்பு கிடைக்கவில்லை! தெலுங்கு டீஸருக்கு 24 மணி நேரத்தில் 50 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையிடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து ‘2.0’ டீஸருக்கு 25 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையிடல்கள் கிடைத்திருப்பதால இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. இதுவரை ரஜினி நடிப்பில் வெளியான படங்களின் டீஸர் படைத்த சாதனைகளை இப்போது ‘2.0’ டீஸர் முறியடித்துள்ளதுது. இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தின் டீஸருக்கு 24 மணிநேரத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட பார்வையிடல்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதைப் போல ராஜமௌலியின் ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் டீஸர்களும் உலக அளவில் சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#2Point0 #Rajinikanth #AkshayKumar #Shankar #ARRahman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் டீஸர்


;