அர்ஜுன், விக்ரம் பிரபு, ஜாக்கி ஷெராஃப் இணையும் படம்!

அர்ஜுன், விக்ரம் பிரபு, ஜாக்கி ஷெராஃப் இணைந்து நடிக்கும் படம் ‘வால்டர்’

செய்திகள் 14-Sep-2018 11:49 AM IST VRC கருத்துக்கள்

‘மதுக்கூர் மூவி மேக்கர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் சிங்காரவேலன் தற்போது தயாரித்து வரும் படம் ’கழுகு-2’ சத்யசிவா இயக்கும் இந்த படத்தில் கிருஷ்ணா, பிந்துமாதவி முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளனர். ‘வால்டர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் U.அன்பரசன் இயக்குகிறார். இந்த படத்தில் அர்ஜுன், விக்ரம் பிரபு, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் மூன்று விதமான கதாநாயகன் வேடம் ஏற்கிறார்கள். ‘மாயவன்’ படத்தில் வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராஃப் இப்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘பாண்டி முனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இப்போது ‘வால்டர்’ படத்திலும் இணைந்துள்ளார் ஜாக்கி ஷெராஃப்.

‘வால்டர்’ படத்திற்கான கதாநாயகிகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவிருக்கிறது. சென்னையில் நடக்கும் படப்பிடிப்பை தொடர்ந்து மதுரை, கும்பகோணம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இந்த படத்தின் ஒளிப்பதிவை சதீஷ் குமார் கவனிக்க, ‘அர்ஜுன் ரெட்டி’ படப் புகழ் ரதன் இசை அமைக்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார்,

#Arjun #VIkramPrabhu #Walter

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் - ட்ரைலர்


;