‘சர்கார்’, ’மாரி-2’ - முக்கிய தகவல்களை வெளியிட்ட வரலட்சுமி!

‘சர்கார்’, ‘மாரி-2’ – விறுவிறுப்பாக டப்பிங் வேலைகளை முடித்த வரலட்சுமி சரத்குமார்!

செய்திகள் 14-Sep-2018 3:09 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ மற்றும் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷு நடிக்கும் ‘மாரி-2’ ஆகிய இரண்டு படங்களிலும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். தனது ஒவ்வொரு பட வேலைகள் குறித்த அப்டேட்களை உடனுக்கு உடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்வது வழக்கமாக கொண்டிருப்பவர் வரலட்சுமி சரத்குமார்! ஓரிரு நாட்களுக்கு முன் ‘சர்கார்’ படத்திற்கான தனது டப்பிங் வேலைகளை முடித்து விட்டதை பதிவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து இப்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘மாரி-2’ படத்திற்கான டப்பிங் வேலைகளை முடித்துவிட்ட தகவலையும் நேற்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். ‘மாரி-2’வில் தனுஷுடன், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வித்யா பிரதீப் ஆகியோர் நடிக்க வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கிரது. ‘மாரி-2’ டிசம்பர் 21-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்ரு ட்ரைலர்


;