இறுதிக்கட்டத்தில் த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’!

திருஞானம் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படம் பற்றிய புதிய தகவல்கள்

செய்திகள் 15-Sep-2018 2:00 PM IST Chandru கருத்துக்கள்

ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிக்கும் உற்சாகத்தில் இருக்கிறார் த்ரிஷா. அதோடு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கும் ‘96’ படமும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், அவர் ஹீரோயினாக நடிக்கும் மற்றொரு படமான ‘பரமபதம் விளையாட்டு’ படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. திருஞானம் டைரக்ஷனில் உருவாகிவரும் இப்படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை 24பிக்ஷீs நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;