கதாநாயகனாகும் ‘யோகி’ பாபு!

சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘கூர்கா’ படத்தின் மூலம் கதாநாயகனாகும்  ‘யோகி’ பாபு!

செய்திகள் 17-Sep-2018 12:13 PM IST VRC கருத்துக்கள்

ஏகபட்ட படங்களை கையில் வைத்து படு பிசியாக நடித்து வரும் நகைச்சுவை நடிகர் ‘யோகி ’பாபு. வடிவேலு, சந்தானம் முதலானோரை தொடர்ந்து ‘யோகி’ பாபுவும் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஏற்கெனவே ‘யோகி’ பாபு ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் ‘என் முகத்தை யாரும் கதாநாயகனாக பார்க்க விரும்ப மாட்டார், கடைசி வரையிலும் காமெடியனாக மட்டுமே நடிப்பேன்’ என்று யோகி பாபு கூறி வந்தார்! இந்நிலையில் சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘யோகி’ பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘கூர்கா’ என்ற பட பறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பட போஸ்டரில் ‘யோகி’ பாபு வித்தியாசமாக ‘கூர்கா’ வேடம் அணிந்து தோற்றம் அளிக்க, பக்கத்தில் ஒரு நாயும் இருக்கிறது மாதிரி அந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘யோகி’ பாபுவின் வித்தியாசமான தோற்றத்தை பார்க்கும்போது இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாக இருக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்கியிருப்பதோடு இந்த படத்தின் ஹீரோ யோகி பாபு தான் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

#YogiBabu #SamAnton #Gurkha #GurkhaTheMovie

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;