‘காதலை தேடி’ ஜி.வி.பிரகாஷ்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் ‘ காதலை தேடி நித்யா நந்தா’

செய்திகள் 17-Sep-2018 1:28 PM IST VRC கருத்துக்கள்

‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ படத்தின் மூலம் முதன் முதலாக கூட்டணி அமைத்தவர்கள் ஜி.வி.பிரகாஷும், ஆதிக் ரவிச்சந்திரனும். வெற்றிப் படமாக அமைந்த இந்த படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படம் பல சர்ச்சைகளை உருவாக்கியது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் வைத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு படத்தை இயக்குகிறார் என்றும் இந்த படம் 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்படவிருக்கிறது என்ற தகவலை வெளியிட்டிருந்தோம், இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள படக்குழுவினர் இப்படத்திற்கு ‘காதலை தேடி நித்யா நந்தா’ என்று பெயரிடப்பட்டு அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்துள்ளார்கள். படத்தின் நாயகன், நாயகியின் பெயர் நித்யா - நந்தா என்பதால் படத்திற்கு ‘காதலை தேடி நித்யா நந்தா’ என்று டைட்டில் சூட்டியிருப்பதாக படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

‘VISION I MEDIAS’ என்ற நிறுவனம் சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் அமீரா தஸ்தர் கதாநாயகியாக நடிக்க, சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்து வரும் இந்த படத்தின் ஒளிப்பதிவை அபிநந்தன் ராமானுஜம் கவனிக்க, படத்தொகுப்பை ரூபனும், கலை இயக்கத்தை இளையராஜாவும் கவனித்து வருகிறார்கள். கதாநாயகனாக நடித்து ஜி.வி.பிரகாஷே இசையும் அமைத்து வருகிறார்.

#KadhalaiThediNithyanandha #GvPrakash #AdhikRavi #AmyraDatsur #SanchithaShetty

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;