‘ஓகே கண்மணி’யை தொடர்ந்து ‘செக்கச் சிவந்த வானம்!

‘செக்க சிவந்த வானம்’ படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட்

செய்திகள் 18-Sep-2018 1:19 PM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ வருகிற 27-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஜய்சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இப்படத்தின் சென்சார் காட்சி நேற்று நடைபெற்றது. இந்த காட்சியில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்கு சென்சார் குழுவினர் U/A சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் இதற்கு முன் வெளியாகிய ‘ஓகே கண்மணி’க்கு சென்சாரில் ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய ‘காற்று வெளியிடை’க்கு க்ளீன் ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருந்தது. ‘ஓகே கண்மணி’யை தொடர்ந்து இப்போது ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்கு U/A சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#ChekkaChivandhaVaanam #CCV #ManiRathnam #ARRahman #AravindSamy #VijaySethupathi #STR #AishwaryaRajesh #Jyothika #AditiRaoHydari #DayanaErappa

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;