வைரலான ‘விஸ்வாசம்’ அஜித் புகைப்படங்கள்!

அஜித்தின் ‘விஸ்வாசம்’ – வைரலான படப்பிடிப்பு புகைப்படங்கள்!

செய்திகள் 18-Sep-2018 3:37 PM IST VRC கருத்துக்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் அஜித் வில்லன்களுடன் மோதும் படு பயங்கர சண்டை காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சி அளிக்க அஜித்துடன் பாலிவுட் நடிகர் ராஜா அவ்னா மோதும் காட்சிகளை படமாக்கி வரும் நிலையில், இந்த காட்சிகளை யாரோ மிக ரகசியாக படம் பிடித்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அஜித், ராஜா அவ்னா மற்றும் திலீப் சுப்பாராயன் ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்த புகைப் படங்கள் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துடன் நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, போஸ் வெங்கட், விவேக், ரோபோ சங்கர், உட்பட பலர் நடிக்கிறார்கள். டி.இமான் இசை அமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

#Viswasam #Siva #Thala #Ajith #Nayanthara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;