இந்த வார ரிலீஸில் 2 போலீஸ் கதைகள்!

இந்த வாரம் ‘சாமி-2’, ‘ராஜா ரங்குஸ்கி’, ‘ஏகாந்தம்’ ஆகிய 3 நேரடி தமிழ் படங்கள் வெளியாகிறது!

செய்திகள் 20-Sep-2018 5:31 PM IST VRC கருத்துக்கள்

கடந்த வாரம் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’, சமந்தாவின் ‘யு-டர்ன்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின! அந்த வரிசையில் இந்த வாரம் ‘சாமி-2’, ‘ராஜா ரங்குஸ்கி’, ‘ஏகாந்தம்’ ஆகிய 3 நேரடி தமிழ் படங்கள் வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டம் இதோ…

1. சாமி-2 – ஹரி, விக்ரம் கூட்டணியில் உருவாகி 2003-ல் வெளியான படம் ‘சாமி’. சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘சாமி-2’வில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் பாபி சிம்ஹா, ஜான் விஜய், சூரி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ‘புலி’, ‘இருமுகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஷிபு தமீன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை மறைந்த பிரியனும், வெங்கடேஷ் அங்குராஜும் கவனித்துள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை கனல் கண்ணனும், ஸ்டன்ட் சில்வாவும் அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நாளை உலகம் முழுக்க வெளியாகும் இப்படம் முதல் ‘சாமி’யின் சாதனைகளை முறியடிக்குமா, என்பதை நாம் பொருத்திருந்து தான் பாரக்க வேண்டும்!

2.ராஜா ரங்குஸ்கி - ‘பர்மா’, ‘ஜாக்ஸன் துரை’ ஆகிய படங்களை தொடர்ந்து தரணீதரன் இயக்கியுள்ள படம் இது. இதில் ‘மெட்ரோ’ படத்தின் மூலம் பரவலாக பேசப்பட்ட சிரீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயகுமார், ஜானகிராமன், அனுபமா குமார், ‘கல்லூரி’ வினோத் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘வாசன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும், ‘பர்மா டாக்கீஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படமும் சஸ்பென்ஸ், த்ரில் என்று பயணிக்கும் போலீஸ் கதைதான். கதாநாயகன் கேரக்டர் பெயர் ராஜா, கதாநாயகியின் பெயர் ரங்குஸ்கி என்பதால் இப்படத்திற்கு ‘ராஜா ரங்குஸ்கி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். டி.கே.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பு செய்துள்ளார். ‘மெட்ரோ’வுக்கு பிறகு சிரீஷ் நடிப்பில் வெளியாகும் படம் இது என்பதால் இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது!

3. ஏகாந்தம் – ‘அன்னை தமிழ் மூவீஸ்’ என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆர்செல் ஆறுமுகம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்,. விவந்த், நீரஜா கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் அனுபமா குமார், தென்னவன், கௌதம், ஷர்மிளா, சாந்தி ஆனந்த், விஜய் டிவி புகழ் ராமர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ள இந்த படத்திற்கான பாடல்களை யுகபாரதி, ஏக்நாத் எழுதியுள்ளனர். எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்துள்ளார், காதல், செண்டிமெண்ட் கலந்த குடும்ப கதையாக உருவாகியுள்ள இபபடம் மக்களுக்கு தேவையான நல்ல ஒரு மெசேஜை சொல்லும் படமாகவும் உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது!

நாளை (21-9-18) மேற்குறிப்பிட்ட மூன்று படங்கள் வெளியாக இருக்க இந்த படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிப் படங்களாக அமையும் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;