‘சண்டக்கோழி-2’ ஆடியோ ரிலீஸ் தேதி!

யுவன் சங்கர் இசையில் அமைத்துள்ள ‘சண்டக்கோழி-2’ படப்பாடல்கள் 24-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 22-Sep-2018 12:48 PM IST VRC கருத்துக்கள்

லிங்குசாமி, விஷால் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘சண்டக்கோழி-2’. விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுடன் கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார், கஞ்சா கருப்பு, அப்பானி சரத், தென்னவன் மற்றும் பலர் நடிக்கின்றனர். முதல்பாக ‘சண்டக்கோழி’க்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவே இரண்டாம் பாகத்திற்கும் இசை அமைக்கிறார். இந்த படம் ஆயுதபூஜை விடுமுறை வெளியீடாக அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகிற 24-ஆம் தேதி மிக பிரம்மாண்டமான் விழாவில் வெளியிட ‘சண்டக்கோழி-2’ படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். சமீபத்தில் விஷால் தயாரித்து, நடித்து வெளியான படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கத்தில் வெளியான இப்படம் 100 நாட்கள் தொடர்ந்து ஓடி பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து விஷால் தயாரிப்பிலும், நடிப்பிலும் வெளியாகும் படம் ‘சண்டக்கோழி-2’ என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;