விஜய்சேதுபதியை இயக்கும் எஸ்.பி.ஜனநாதன் உதவியாளர்!

எஸ்.பி.ஜனநாதன் உதவியாளர் வெங்கட் கிருஷ்ணா ரோகாத் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம்!

செய்திகள் 22-Sep-2018 1:45 PM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட் கிருஷ்ணா ரோகாத். இவர் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘புறம்போக்கு’ படத்தில் நடிக்கும்போது விஜய்சேதுபதிக்கும் வெங்கட் கிருஷ்ணா ரோகாதுக்கும் நல்ல புரிதல் இருந்ததாம். இந்நிலையில் எஸ்.பி.ஜனநாதன், விஜய்சேதுபதியிடம் வெங்கட் கிருஷா ரோகத்திடம் ‘உங்களுக்கு பொருத்தமான ஒரு கதை இருக்கிறது, கேட்டுப் பாருங்கள்’ என்று சொல்லியுள்ளார். அதன்படி விஜய் சேதுபதி அந்த கதையை கேட்க, விஜய்சேதுபதிக்கு கதை மிகவும் பிடித்து விட உடனே வெங்கட் கிருஷ்ணா ரோகத் இயக்கத்தில் நடிக்க ஒப்புகொண்டுள்ளார்! ஏற்கெனவே சில படங்களில் தனது தோற்றத்தை மாற்றி நடித்துள்ள விஜய்சேதுபதி இந்த படத்திற்காகவும் தனது தோற்றத்தை மாற்றி நடிக்க இருக்கிறாராம். இந்த படம் மியூசிக்கல் சப்ஜெக்ட் என்றும் இந்த படத்தில் நம்ம ஊர் ஹீரோயின் ஒருவருடன் வெளிநாட்டு ஹீரோயின் ஒருவரும் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த மேலும் பல புதிய தகவல்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#VijaySethupathi #spjananathan #venkatkrishnarohath #Peraanmai #Porambokku

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிப்ஸி ட்ரைலர்


;