பி.வாசு இயக்கத்தில் எம்.ஜி.ஆர். படம்!

பி.வாசு இயக்கத்தில்  ‘என் ஃபேஸ்’ எனும் புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் எம்.ஜி.ஆர்.படம்!

செய்திகள் 25-Sep-2018 4:22 PM IST VRC கருத்துக்கள்

அனிமேஷன் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர்.நடிக்கும் படமாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படம் உருவாகி வரும் நிலையில் மற்றுமொரு எம்.ஜி.ஆர். திரைப் படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை பி.வாசு இயக்குகிறார்.

மலேசியாவின் சர்வதேச ஊடக தொழில்நுட்ப நிறுவனம் ஆரஞ்ச் கவுண்டி. இந்த நிறுவனம் ‘என் ஃபேஸ்’ எனும் முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த தயாரிப்பில் இந்த நிறுவனத்துடன் பல முன்னணி சர்வதேச VFX தொழில்நுட்ப வல்லுனர்களும் இணைந்து பணிபுரியவிருக்கின்றனர். இந்த படத்தின் மூலம் எம்.ஜி.ஆர்.என்று அழைக்கப்படும் ராமச்சந்திரனின் வாழ்க்கை வரலாறை மக்கள் முன் மீண்டும் உயிரோட்டமாக காட்சிப்படுத்துவதே இவர்களது லட்சியம். இந்த படத்தை பி.வாசு இயக்க, இந்த படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளில் படமாக இருக்கிறது. இந்த படத்தில் இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட கலைஞர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இந்த படத்தை பி.வாசு இயக்குவது குறித்து ஆரஞ்ச் கவுண்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ மார்கழி பழனி கூறும்போது,

‘‘இயக்குனர் வாசுவின் தந்தை பீதாம்பரம், எம்.ஜி.ஆரின் ஒப்பனை கலைஞராக பணியாற்றியவர். அதனால் எம்.ஜி.ஆரின் அசைவுகள், நடத்தைகள், முக பாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பும் பி.வாசுவுக்கு கிடைத்துள்ளது. அதனாலேயே இந்த படத்தை இயக்குவதற்கு பி.வாசுவை தேர்வு செய்தோம். இந்த படத்திற்கான வேலைகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது’’ என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - டிரைலர்


;