ஹாரர் படத்தில் இணையும் நட்ராஜ், மனிஷா யாதவ்!

ராகவா லாரன்ஸ் உதவியாளர் இயக்கத்தில் நட்ராஜ், மனிஷா யாதவ் நடிக்கும் ‘சண்டிமுனி’

செய்திகள் 26-Sep-2018 5:13 PM IST VRC கருத்துக்கள்

ராகவா லாரன்ஸிடம் ‘முனி-3 காஞ்சனா-2’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மில்கா எஸ்.செல்வகுமார். இவர் ‘சண்டிமுனி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நட்ராஜ் நடிக்கிறார். கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். இவர்களுடன் வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்க, யோகி பாபு, மயில்சாமி, ஆர்த்தி, வாசு விக்ரம், முத்துக்காளை,,கிரேன் மனோகர் உட்பட பலர் நடிக்கிறார்கள்.இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை பழனியில் துவங்குகிறது. அதனை தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய படகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடக்க இருக்கிறது.

ஒரு பெண்ணுக்கும், பேய்க்கும் இடையில் நடக்கும் போர்க்களமும், இவர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு முழிக்கும் சண்டி என்கிற கதாபாத்திரமுமாக பயணிக்கும் இந்த கதையில் நட்ராஜ் சண்டி என்கிற சிவில் என்ஜினீயராக நடிக்கிறார். மனிஷா யாதவ் ராதிகா என்கிற ஆசிரியையாக நடிக்கிறார். இந்த படத்திற்கு செந்தில் ராஜகோபால் ஒளிப்பதிவு செய்ய, ரிஷால் சாய் இசை அமைக்கிறார். புவன் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கத்தை முத்துவேல் கவனிக்கிறார். இந்த படத்தை ‘சிவம் மீட்யா ஒர்க்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;