மாயா, மாநகரம் படங்களைத் தொடர்ந்து ‘மான்ஸ்டர்’

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு

செய்திகள் 1-Oct-2018 5:54 PM IST Chandru கருத்துக்கள்

நயன்தாரா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படமான ‘மாயா’ மூலம் தமிழ் சினிமா தயாரிப்புத்துறையில் 2015ல் களமிறங்கிய நிறுவனம் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ். இப்படத்தைத் தொடர்ந்து இந்நிறுவனம் தயாரித்து 2017ல் வெளியான ‘மாநகரம்’ படமும் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்றது. இந்நிறுவனத்தின் 3வது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் படத்தை ‘ஒரு நாள் கூத்து’ இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
எலியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள காமெடி, குடும்ப சித்திரமான இப்படத்திற்கு ‘மான்ஸ்டர்’ என்ற வித்தியாசமான டைட்டிலை சூட்டியுள்ளனர். கருணாகரன் காமெடியனாக நடித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை கோகுல் பினோய் கவனிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ படத்தின் எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்திற்கும் எடிட்டிங் பணிகளை கவனித்து வருகிறார். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படம் குறித்த புதிய அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Monster #SJSuryah #PriyaBhavaniShankar #PotentialStudios #Nelson

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடைக்குட்டி சிங்கம் ட்ரைலர்


;