தெலுங்கில் ‘ரீ-மேக்’காகும் ‘96’

விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்துள்ள ‘96’ தெலுங்கில் ரீ-மேக்காகிறது!

செய்திகள் 3-Oct-2018 1:10 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்துள்ள படம் ‘96’. இந்த திரைப்படம் நாளை (அக்டோபர்-4) வெளியாகிறது. வெளியீட்டுக்கு முன்னதாகவே இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடைபெற, பத்திரிகையாளர்களின் நல்ல விமர்சனங்களுடன் இப்படம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்து தயாரிக்க முன் வந்துள்ளார் தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு. இவரும், தெலுங்கு நடிகர் நானியும் சமீபத்தில் ‘96’ படத்தை பார்த்துள்ளார்கள்! இந்த படம் இருவருக்கும் ரொம்பவும்பிடித்துபோக, உடனே ‘96’ படத்தின் தெலுங்கு ரீ-மேக் உரிமையை கைபற்றியுள்ளார் தில் ராஜு. இந்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் பிரேம் குமாரே நம்மிடம பகிர்ந்துகொள்ள, தமிழில் விஜய்சேதுபதி நடித்த கேரக்டரில் தெலுங்கில் நானி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது!

#96TheMovie #Trisha #VijaySethupathi #96TeluguRemake

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;