விஜய் ஆண்டனிக்கு இது முதல் முறை!

விஜய்யின் ‘சர்கார்’ படத்துடன் களமிறங்கும் விஜய் ஆண்டியின் ‘திமிரு புடிச்சவன்’

செய்திகள் 8-Oct-2018 12:16 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ தீபாவளிக்கு வெளியாகும் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட விஷயமாகும். அதே நேரம் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘NGK’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதால், இந்த தீபாவளிக்கு விஜய்யின் ‘சர்கார்’ மட்டுமே வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் இப்போது இந்த தீபாவளிக்கு மற்றுமொரு படமும் ரிலீசாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது விஜய் ஆண்டனி நடிக்கும் ‘திமிரு புடிச்சவன்’. இந்த படம் நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர். விஜய் ஆண்டனி நடிப்பில் இதுவரை எந்த படமும் தீபாவளி வெளியீடாக வந்ததில்லை. இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கி வரும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறர். நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசை அமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்யின் ‘சர்கார்’ பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் நிலையில் இப்போது விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ படமும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதால் விஜய், விஜய் ஆண்டனி இருவரும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;