இது, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமான படம்!

தனுஷின் 'வட சென்னை' A சர்டிபிக்கெட்டுடன் வெளியாகிறது!

செய்திகள் 10-Oct-2018 12:07 PM IST Top 10 கருத்துக்கள்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'வடசென்னை' படம் உருவாகியுள்ளது. சென்னையின் முப்பது ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் விதமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படம் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதற்கான காரணத்தை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'இந்தப் படத்தின் ஆக்ரோஷமான காட்சிகளை அப்படியே கொடுக்க விரும்பியதாலும், படத்தின் தீவிரம் குறையாதவாறு இருக்க விரும்பினோம். அதனால் எவ்வித சென்சார் கட்களும் இன்றி ‘ஏ’சான்றிதழுடன் அக்டோபர் 17-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது வடசென்னை” என்று கூறியுள்ளார். இந்த படத்தில் தனுஷுடன் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் அமீர், சமுத்திரகனி உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

#vadachennai #dhanushs #vetrimaaran #AishwaryaRajesh #Ameer #Samuthirakani #SanthoshNarayanan #Andrea

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பொட்ட காட்டில் பூவாசம் வீடியோ பாடல் - பரியேறும் பெருமாள்


;