மீண்டும் இணையும் ‘PPK’ கூட்டணி!

மீண்டும் இணையும் ‘PPK’ கூட்டணி!

செய்திகள் 10-Oct-2018 1:26 PM IST VRC கருத்துக்கள்

‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் யுவன் சங்கர் ராஜா, இளன்! சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் ‘பியார் பிரேமா காதல்’. ஹரீஷ் கல்யான், ரைசா வில்சன் கதாநாயகன், கதாநாயகியாக நடித்த இந்த படத்தை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்திற்கான இசையையும் அவரே வழங்கினார். தனது முதல் தயாரிப்பான இப்படம் வெற்றிப் படமாக அமைந்ததால் இப்போது தனது இரண்டாவது படத்தின் தயாரிப்பில் களம் இறங்கியுள்ள யுவன் சங்கர் ராஜா, தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் இளனிடமே வழங்கியுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக இளம் ரசிகர்களை கவர்ந்த ‘பியார் பிரேமா காதல்’ படம் போலவே இப்படமும் இளம் ரசிகர்களை டார்கெட் வைத்து எடுக்கப்படும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்? தொழில்நுட்ப கலைஞர்களாக யார் யார் பணியாற்றுகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

#YuvanShankarRaja #Elann #YSRFilms

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;