‘சர்கார்’ டீஸர் குறித்த தகவல்!

விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் டீஸர் 19-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 10-Oct-2018 1:29 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சர்கார்’ தீபாவளிக்கு ரிலீசாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ஹிட்டாகியுள்ள நிலையில் இப்படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது ‘சர்கார்’ படத்தின் டீஸர் வருகிற 19-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். டீஸரை தொடர்ந்து ‘சர்கார்’ படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;