‘வட சென்னை’ ரிலீசுக்கு பிறகு மற்றொரு கதையில் இணையும் தனுஷ், வெற்றிமாறன்!

நான்காவது முறையாக வேறு ஒரு கதையில் இணையும் வெற்றிமாறன், தனுஷ்

செய்திகள் 10-Oct-2018 2:23 PM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ இம்மாதம் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. மூன்று பாகங்களகாக உருவாகி வரும் ‘வட சென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அடுத்த ஆண்டு துவங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக வெற்றிமாறனும், தனுஷும் வேறு ஒரு கதையில் இணையவிருக்கிறார்கள். ‘வட சென்னை’ முதல் பாகம் வெளியான பிறகு இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வட சென்னை’ ஆகிய படங்களை தொடர்ந்து வெற்றிமாறனும், தனுஷும் நான்காவது முறையாக இணையும் இப்படமும் மாறுபட்ட கதைகளத்தைகொண்ட படைப்பாம்!

‘வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து நாகார்ஜுனா, அதிதிராவ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் தனுஷ், ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ஆகிய படங்களை இயக்கிய ராம் குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;