சிம்பு நடிக்க இருந்த படம் ‘வட சென்னை’

முதலில் சிம்பு நடிப்பதாக இருந்து பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வட சென்னை’

செய்திகள் 10-Oct-2018 6:46 PM IST Top 10 கருத்துக்கள்

தனுஷ் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ல படம் ‘வட சென்னை’. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷுடன் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, இயக்குனர் அமீர், டேனியல் பாலாஜி, பவன் என பலர் நடித்துள்ளனர். வருகிற 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது. அப்போது ‘வட சென்னை’ படம் குறித்து தனுஷ் பேசும்போது,

‘‘வட சென்னை’ கதையை வெற்றி மாறன் ரெடி செய்ய ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிறது! 2013-ல் இந்த கதையை பண்ண முயற்சி செய்தார் வெற்றிமாறன்! அதே நேரம் இந்த கதையை எடுக்க சரியான நேரம் இது அல்ல என்று எங்களுக்கு தோன்றியது. காரணம் எங்களுக்கு அப்போது கு சரியான மார்க்கெட் இல்லை. ‘வட சென்னை’ பெரிய கதை. அதை செய்ய நிறைய கால அவகாசமும், பொருளாதரமும் வேண்டும். அதனால் அந்த கதையை தள்ளிவைத்து விட்டு நாங்கள் ‘ஆடுகளம்’ பண்ணினோம். அப்புறம் ஒரு பிரேக் எடுத்து வேலை செய்யலாம் என்று இருவரும் முடிவு செய்து நாங்கள் வேறு வேறு படங்களை செய்ய ஆரம்பித்தோம்.

அப்படி இருக்கும்போது ஒரு நாள் வெற்றிமாறன் எனக்கு ஃபோன் செய்து, ‘வட சென்னை’ கதையை நான் சிம்புவை வைத்து பண்ணலாம் என்று இருக்கிறேன். இப்போது ‘வட சென்னை’ படத்தில் நான் செய்திருக்கிற அன்பு கேரக்டரை சிம்பு செய்வதாகவும், படத்தில் வருகிற குமார் என்ற பவர்ஃபுல்லான கேரக்டரில் என்னை நடிக்க வைப்பதாகவும் கூறினார் வெற்றிமாறன். அப்போது நான் வெற்றிமாறனிடம் சொன்னேன், ‘சார் எனக்கு கொஞ்சம் பெருந்தன்மை இருக்கிறது, ஆனால் அவளோ பெரிய பெருந்தன்மை எல்லாம் இல்லை! தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’’ என்று அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை!

அதற்கப்புறம் நான் வேறு படங்களில் பிசியாகி விட்டு நடித்துக்கொண்டிருக்கும்போது மறுபடியும் வெற்றிமாறன் ஃபோன் செய்து, ‘சில காரணங்களால் சிம்புவை வைத்து ‘வட சென்னை’ படத்தை துவங்க முடியவில்லை! அதனால் நாமளே செய்வோம், உங்களுக்கு சம்மதமா என்று கேட்டார்! சம்மதம் என்றேன். ஆனால் சிம்புவுக்கு சொன்ன கதையில் உடனே நான் நடிக்க முடிவெடுத்தால் அது தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கும் என்று என்று ‘வட சென்னை’ படத்தை மீண்டும் தள்ளி வைத்தோம். அதற்கு பிறகு வெற்றிமாறன் ‘விசாரணை’ படத்தை இயக்கினார். நானும் வேறு சில படங்களில் நடித்தேன். அதன் பிறகு ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நானும், வெற்றிமாறனும் ‘வட சென்னை’யை துவங்கினோம். இப்போது படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது! இதை சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை’’ என்று வட சென்னை உருவாகிய கதையை சொன்னார் தனுஷ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;