நயன்தாரா நடிப்பில் ‘மாயா’ எனும் வெற்றிப் படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன். ‘மாயா’வை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள படம் ‘இரவாக்காலம்’. ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா கேபி, ஹரீஷ் பிஷாரடி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
‘இரவாக்காலம்’ படத்தை தொடர்ந்து அஸ்வின் சரவணன் இயக்கும் படம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. தனது மூன்றாவது படமாக ‘கேம் ஓவர்’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் டாப்ஸி கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை ஷஷிகாந்தின் ‘ஒய் நாட் ஸ்டுடியோ’ நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இந்த படத்தின் கதையை அஸ்வின் சரவணன், காவியா ராம்குமார் இருவரும் எழுத, வசந்த் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்ய, ‘மாயா’ ‘இரவாக்காலம்’ படங்களுக்கு இசை அமைத்த ரான் எதன் யோஹான் இசை அமைக்கிறார். த்ரில்லர் ரக படமாக உருவாகும் ‘கேம் ஓவர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் முதலான படங்களை இயக்கிய அஹமத் ‘ஜெயம்’ ரவியை வைத்து ஒரு படத்தை...
தமிழ்ப்படங்களைக் கலாய்த்தே எடுக்கப்பட்ட தமிழின் முதல் படமான ‘தமிழ்ப்படம்’ வெளிவந்து கிட்டத்தட்ட 7...
2010-ல் வெளியாகி வெற்றிபெற்ற ‘தமிழ் படம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை சி.எஸ்.அமுதன்...