சிம்பு கதாநாயகனாக நடிக்க, சுந்தர்.சி.இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கேத்ரின் தெரெசா, மேகா ஆகாஷ் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் இப்போது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். அவர் மகத். அஜித்துடன் ‘மங்காத்தா’, விஜய்யுடன் ‘ ஜில்லா’ ஆகிய படங்களில் நடித்த மகத், சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து மகத் இப்போது மீண்டும் சிம்புவுடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தில் ‘மகத்’க்கு முக்கியமான கேரக்டர் என்று சொல்லப்படுகிறது! ‘லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாந்த இந்த படம் தெலுங்கு ‘Attarintiki Daaredi’ படத்தின் ரீ-மேக்காகும்!
அறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில் சசிக்குமார், நிக்கி கல்ராணி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத...
சமீபத்தில் வெளியான ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த சசிக்குமார் நடிப்பில் அடுத்து...
கடந்த வாரம் ‘சார்லி சாப்ளின்-2’, ‘குத்தூசி’, ‘சிம்பா’ ஹிந்தி டப்பிங் படமான ‘மணிகர்னிகா’ ஆகிய 4...