கார்த்தியின் ‘தேவ்’ டப்பிங் வேலைகள் துவங்கியது!

இறுதிகட்ட படப்பிடிப்பில்; இருந்து வரும் கார்த்தியின் ‘தேவ்’-  டப்பிங் வேலைகள் துவக்கியது!

செய்திகள் 11-Oct-2018 12:43 PM IST VRC கருத்துக்கள்

மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படம் ‘தேவ்’. ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.லட்சுமண் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கி வருகிறார். ஆக்‌ஷன் அட்வெஞ்சர் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் வேலைகள் நேற்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. டப்பிங் வேலைகள் துவங்கிய நிலையில் முதலாவதாக கார்த்தி டப்பிங் பேசி துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து ‘தேவ்’ படக்குழுவினர் இப்படத்தின் மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்புக்காக குலு மணாலிக்கு பயணமாகியுள்ளனர். ஏற்கெனவே ‘தேவ்’ படப்பிடிப்புக்காக குலு மணாலிக்கு செல்லும் வழியில் அங்கே கன மழை ஏற்பட, பெரும் வெள்ளம் மற்றும் நில சரிவுகள் காரணமாக தேவ் படத்தின் பிடிப்பை நடத்த முடியாமல் திரும்பி வந்தார்கள். அப்போது படமாக்க திட்டமிட்டிருந்த காட்சிகளை இப்போது படமாக்க குலு மணாலி சென்றுள்ள படக்குழுவினர், அங்கு 12 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இத்துடன் ‘தேவ்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடுமாம்!

ஹிமாலய மலை பகுதியான அங்கு படத்தின் முக்கியமான சேசிங் காட்சிகளையும், சண்டை காட்சிகளையும் படமாக்க இருக்கிறார்கள். இந்த காட்சிகள் ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் படமாகவிருக்கிறது. சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, பஞ்சகனி, குலுமணாலி, குல்மார்க், இமாலயா, உக்ரைன், லீவின் அண்ட் கியூ, உலகின் உயரமான மலைப் பிரதேசமான கார் தா ஹாயின் போன்ற பல்வேறு பகுதிகளில் ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்க் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த தகவல்களை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#Dev #Karthi #Karthi17 #PrincePictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி டீஸர்


;