சமுத்திரக்கனி, சுனைனா இணைந்து நடிக்கும் படம்!

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுனைனா இணைந்து நடிக்கும் படம் ‘சில்லு கருப்பட்டி’

செய்திகள் 11-Oct-2018 1:43 PM IST VRC கருத்துக்கள்

‘பூவரசம் பீ பீ ’ என்ற குறும்படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கி வரும் படம் ‘சில்லு கருப்பட்டி. இந்த படத்தில் முதன் முதலாக சமுத்திரக்கனியும், சுனைனாவும் இணைந்து நடிக்கின்றனர். டிவைன் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரிக்கும் இந்த படத்தில் நான்கு வெவ்வேறு கதைகள் உள்ளன. அதில் ஒரு கதையில் சமுத்திரக்கனி, சுனைனா நடுத்தர வயது தம்பதியராக நடிக்கின்றனர். இவர்களுடன் ‘ஓகே கண்மணி’ படத்தின் மூலம் பிரபலமான லீலா சாம்சன் ஒரு கதையிலும், ‘தெய்வ திருமகள்’, ‘சைவம்’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா இன்னொரு கதையிலும் நடிக்கிறர். நிவேதிதா, சதீஷ், மணிகண்டன் ஆகியோர் மற்றொரு கதையில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதில் மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜம், யாமினி, விஜய்கார்த்திக் ஆகிய நான்கு வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றுகின்றனர். பிரதீப் குமார் இசை அமைத்து வரும் இந்த படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாக இயக்கி வருவதாக கூறியுள்ளார் இயக்குனர் ஹலீதா ஷமீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ


;