2-ஆம் பாக வரிசையில் இடம் படித்த விஷ்ணுவிஷால் படம்!

ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது!

செய்திகள் 22-Oct-2018 4:14 PM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றிபெற்ற பல படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்குவது வழக்கமாகி வருகிறது. அந்த வரிசையில் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் காலத்தை கடந்து (TIME TRAVEL) பயணிக்கும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜாவும், ‘திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட்’ சி.வி.குமாரும் இணைந்து தயாரித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சி.வி.குமார் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் இந்த படம் குறித்த முக்கிய தகவல்களை விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ‘இரண்டாம் பாகத்தில் நானும், கருணாகரனும் இருக்கிறோமா?’ என்று நடிகர் விஷ்ணு விஷால் கேட்டதற்கு பதில் அளித்துள்ள சி.வி.குமார், ‘நீங்கள் இருவரும் இல்லாமல் எப்படி?’ என்று பதில் கூறியிருக்கிறார். இதன் மூலம் ‘இன்று நேற்று நாளை’ படத்தில் விஷ்ணு விஷாலும், கருணாகரனும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;