அண்ணன், தங்கை பாசத்தை சொல்லும் படம்!

அறிமுக இயக்குனர் விஜயசேகரன் இயக்கும் 'எவனும் புத்தனில்லை'

செய்திகள் 29-Oct-2018 7:01 PM IST VRC கருத்துக்கள்

வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ்' என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் 'எவனும் புத்தனில்லை'. இந்த படத்தில் நபி நந்தி ,சரத் இருவரும் கதாநாயகன்களாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா நடிக்க, இவர்களுடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர், சினேகன் ஆகியோர் நடித்துளள்ளனர். மற்றும் 'நான் கடவுள்' ராஜேந்திரன், சங்கிலிமுருகன், எம்.எஸ் .பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, சிங்கமுத்து, கே.டி.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, 'பசங்க' சிவக்குமார், சுப்புராஜ், எம்.கார்த்திகேயன் 'காதல்' சரவணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள S.விஜயசேகரன் படம் குறித்து பேசும்போது, ''அண்ணன் தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக உருவாக்கப் பட்டுள்ளது 'எவனும் புத்தனில்லை'. அதே நேரம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக மலை வாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது'' என்றார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடை பெற்றது.
இந்த படத்திற்கு மரியா மனோகர் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ராஜா சி.சேகர் கவனித்துள்ளார். சுரேஷ் அர்சஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;