சீன மொழியில் வெளியாகும் சுசீந்திரன் படம்!

சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரக்கனி நடிக்கும் ‘கென்னடி கிளப்’ சீன மொழியிலும் வெளியாகிறது!

செய்திகள் 22-Nov-2018 1:20 PM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், அறிமுகம் மீனாக்‌ஷி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்மிரிதி, சௌந்தர்யா ஆகியோர் நடிக்கும் படம் ‘கென்னடி கிளப்’. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இந்த படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக இருக்கிறது. இந்த படம் சீனாவிலும் வெளியாக இருக்கிறது என்ற தகவலை இப்படக்குழுவினர் வெளியிட்டுளனர். இது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘ஹிந்தியில் வெளியான் ‘டங்கல்’, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்களுக்கு சீன சினிமா சந்தையில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த வரிசையில் ‘கென்னடி கிளப்’ படத்திற்கும் சீனாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் ‘கென்னடி கிளப்’ படத்தின் கதை! ‘கென்னடி கிளப்’ படத்தை சீன மொழியில் டப் செய்து வெளியிடுவதற்கான உரிமையை 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது’’ என்று அதில குறிப்பிடப்பட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘கென்னடி கிளப்’ படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை பி.சேகர் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுட்டு பிடிக்க உத்தரவு ட்ரைலர்


;