‘‘மான்ஸ்டர் கதை என் வீட்டில் நடந்த சம்பவம்!’’ - இயக்குனர்

‘ஒரு நாள் கூத்து’ படத்தைத் தொடர்ந்து நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள ‘மான்ஸ்டர்’ படம் பற்றிய புதிய தகவல்கள்

செய்திகள் 23-Nov-2018 4:02 PM IST Chandru கருத்துக்கள்

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 3வது படைப்பாக உருவாகி வருகிறது ‘மான்ஸ்டர்’ திரைப்படம். எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ‘ஒருநாள் கூத்து’ இயக்குனர் நெல்சன் வெங்கடசேன் இயக்கியுள்ளார். ப்ரியா பவானி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் கருணாகரன் காமெடி வேடம் ஏற்றுள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின் இறுதிக்கட்டத்திலிருக்கும் ‘மான்ஸ்டர்’ திரைப்படம் பற்றிய படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கூறியுள்ளதாவது,

‘‘இப்படம் எனது முந்தைய படமான ‘ஒரு நாள் கூத்து’ படத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது அதைவிட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். குழந்தைகளைக் கவரும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதால், ஃபேமிலி ஆடின்ஸையும் வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கிறோம். இப்படத்தின் கதையை என் வீட்டில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ளேன். படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா அவர் ஸ்டைலில் மிக இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார். அவரின் கேரக்டர் ரசிகர்களைப் பெரிய அளவில் கவரும்!’’ என்று குறிப்பிட்டுள்ளார் ‘மான்ஸ்டர்’ பட இயக்குனர்.

இப்படம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் வெளியீடு ஆகியவை விரைவில் வெளியிடப்படும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டபக்குனு பாடல் வீடியோ - மான்ஸ்டர்


;