‘யோகி’ பாபுவுடன் இணையும் மேக்னா நாயுடு!

யோகி பாபு நடிக்கும் ‘தர்ம ராஜா’ படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுகிறார் மேக்னா நாயுடு!

செய்திகள் 11-Dec-2018 4:04 PM IST VRC கருத்துக்கள்

‘யோகி’ பாபு கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘தர்ம ராஜா’. முத்துக்குமரன் இயக்கும் இந்த படம் எமலோகத்தை பற்றிய நகைச்சுவை கலந்த கதையாகும். இந்த படத்திற்காக சென்னை ஏ.வி..எம்.ஸ்டுடியோவில் 2 கோடி ரூபாய் செலவில் சுமார் ஒன்றரை லட்சம் வருடங்கள் பழமையான எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சொர்க்கம், நரகம் என்று தனித்தனியாக அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கங்களில் வருகிற 14-ஆம் தேதி முதல் ‘தர்ம ராஜா’வின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாக உள்ளது.

இந்த படத்தில் மகன் எமனாக ‘யோகி’ பாபு நடிக்க, அவரது அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், ‘போஸ்’ வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு நடனம் ஆடுகிறார். இதற்காகவும் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ‘சரவணா’, ‘ஜாம்பவான்’, ‘வீரசாமி’, ‘வைத்தீஸ்வரன்’ உட்பட பல தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ளவர் மேக்னா நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரங்கநாதன் தயாரிக்கும் ‘தர்ம ராஜா’ படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை பாலசந்தர் கவனிக்கிறார். .

#MeghnaNaidu #YogiBabu #DharmaPrabhu #RadhaRavi #RameshThilak

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;