‘கபாலி’, ‘தெறி’ வரிசையில் இணைந்த ரஜினியின் ‘பேட்ட’

ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை கைபற்றிய பிரபல நிறுவனம்!

செய்திகள் 17-Dec-2018 11:57 AM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ பொங்கலுக்கு ரிலீசாகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ‘பேட்ட’யின் இறுதிகட்ட பணிகள் மற்றும் வியாபார விஷயங்கள் சூடு பிடித்துள்ளது. இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் கைபற்றிய தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இதனை தொடர்ந்து இப்டத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை கைபற்ற பல நிறுவனங்களுக்கு இடையில் பலத்த போட்டி நிலவி வந்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இறுதியாக ‘பேட்ட’யின் வெளிநாட்டு விநியோக உரிமையை ‘MALIK STREMS CORPORATION’ நிறுவனம் கைபற்றியுள்ளது என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ரஜினி நடிப்பில் வெளியான ‘கபாலி’, விஜய் நடித்த ‘தெறி’, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’, ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி-2’ உட்பட பல படங்களை வெளிநாட்டில் விநியோகம் செய்த நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;