மரணமாஸ் டிரைலருடன் ரிலீஸ் தேதியும் குறித்த ‘பேட்ட’

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 28-Dec-2018 12:14 PM IST Top 10 கருத்துக்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியானது! ரஜினி ரசிகர்களை மட்டும் இல்லாமல் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும்விதமாக அமைந்துள்ளது ‘பேட்ட’யின் டிரைலர்! அந்த அளவிற்கு அமைந்துள்ளது இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ள ரஜினி, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சசிக்குமார், சிம்ரன், த்ரிஷா, நவாசுத்தீன் சித்திக், மேகா ஆகாஷ் முதலானோரின் தோற்றமும் பங்களிப்பும்! சமீபகாலத்தில் ரஜினி நடித்து வெளியான படங்களில் இடம் பெற்ற ரஜினியை விட இப்படத்தில் தோன்றும் ரஜினி மிகவும் இளமையானவராகவும், படு சுறுசுறுப்பானவராகவும், ஸ்டைலிஷாகவும் தோன்றுகிறார். இதுவே இந்த டிரைலரின் ஹைலைட் என்று சொல்லலாம்! கார்த்திக் சுப்புராஜும் ரஜினியும் முதன் முதலாக இனைந்துள்ள இந்த படம் அனைத்து ரக ரசிகர்களையும் கவரும் என்பது நிச்சயம் என்று சொல்லும் அளவுக்கு மரணமாஸாக அமைந்துள்ளது ‘பேட்ட’யின் முன்னோட்டம்!

‘பேட்ட’ என்றைக்கு வெளியாகும் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் டிரைலரில் ‘பேட்ட’ ஜனவரி 10-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதனால் இந்த பொங்கலுக்கு ரஜினியின் ‘பேட்ட’யும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து படைக்கவிருக்கிறது.

#Petta #MaranaMass #Rajnikanth #VijaySethupathi # KarthikSubburaj #SasiKumar #SananthReddy

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;