இந்த வார ரிலீஸ் களத்தில் ஒரே ஒரு படம் ‘மாணிக்’

இந்த வாரம் மாகாபா ஆனந்த், சூசா குமார் நடிக்கும் ‘மாணிக்’ என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகிறது!

செய்திகள் 4-Jan-2019 11:08 AM IST Top 10 கருத்துக்கள்

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இந்த வாரம் ‘மாணிக்’ என்ற ஒரே ஒரு நேரடி தமிழ் படம் மடுமே வெளியாகிறது. ‘மொஹிதா சினி டாக்கீஸ்’ நிறுவனம் சார்பில் எம்.சுப்பிரமணியன் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் மார்ட்டின் இயக்கி உள்ளார். விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த், சூசன் குமார் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படம் குறித்து இயக்குனர் மார்ட்டின் கூறியதாவது!

‘‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் என்னுடைய குறும்படம் ஒன்று இடம் பெற்று மிகப் பெரிய வரவேற்பு பெற்று இறுதிசுற்றுவரை சென்றது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் சுந்தர்.சி.அவர்கள் என்னுடைய குறும்படத்தை பார்த்து, எதிர்காலத்தில் இதே மாதிரியான படங்களையே இயக்கச் சொன்னார். நானும் லாஜிக் இல்லாத கதைகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். அந்த வகையில் உருவாக்கிய கதைதான் ‘மாணிக்’. இந்த ‘மாணிக்’ என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்றே சொல்லலாம்.

வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதித்து சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் ஹீரோவுக்கு ஒரு சாமியார் ஒரு வரம் வழங்குகிறார். அந்த வரத்தை வைத்து படத்தின் ஹீரோவான மாகாபா.ஆனந்த் எப்படி ஒரு வருடத்திற்குள் தனது லட்சியத்தை அடைகிறார் என்பதை லாஜிக் விஷயங்கள் இல்லாத காமெடி காட்சிகளாக படமாக்கியிருக்கிறோம். இந்த படம் காமெடியை விரும்பி தியேட்டருக்கு வருபவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என்பது என் நம்பிக்கை’’ என்றார்.

இன்று வெளியாகும் ‘மாணிக்’ படத்தில் மாகாபா ஆனந்த், சூசா குமார் ஆகியோருடன் வத்சன், அருள்தாஸ், யோகி பாபு, மதுமிதா, மனோபாலா அனு ஆகியோரும் நடித்துள்ளனர். தரண்குமார் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை எம்.ஆர்.பழனிகுமார் கவனித்துள்ளார். .

#MaKaPaAnand #Maaniik #SuzaKumar #YogiBabu #Manobala #Martyn

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூர்கா டீஸர்


;