துல்கர் சல்மான் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன்!

துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் நடிக்கிறார்!

செய்திகள் 9-Jan-2019 5:47 PM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி வரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. துல்கர் சல்மான், ரிது வர்மா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படபிடிப்பு முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் நடித்துள்ளார் என்ற தகவலை இப்பாத்தில் நடித்திருக்கும் துல்கர் சல்மானும், VJ தக்‌ஷனும் ஒரு ஒரு வீடியோ பதிவின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்க, அந்த வீடியோவில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் இடம்பெற்றுள்ளார். படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக வரும் பிரதாப் என்ற கேரக்டரில் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார்! ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு கேரளாவில் புகழ்பெற்ற இசைக்குழுவான மசாலா காஃபி இசை குழுவினர் இசை அமைக்கிறார்கள். ஒளிப்பதிவை கே.எஸ்.பாஸ்கரன் கவனித்துள்ளார். படதொகுப்பை பிரவீன் ஆண்டனி கவனிக்கிறர். ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் தமிழ் படங்கள் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ மற்றும் ‘வான்’.

#GVM #KKK #KannumKannumKollaiyadithaal #DulquerSalman #RituVarma # VJDakshan
#GauthamVasudevMenon

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நடிகையர் திலகம் டீஸர்


;