கீர்த்தி சுரேஷின் அடுத்த பட அதிகாரபூர்வ அறிவிப்பு!

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்த தெலுங்கு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 11-Jan-2019 11:19 AM IST Top 10 கருத்துக்கள்

‘சர்கார்’ படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பிரியதர்சன் இயக்கத்தில் ‘மரைக்கார்- அரபிகடலின்டெ சிம்ஹம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். வெள்ளையர்களை எதிர்த்து போராடிய குஞ்சாலி மரைக்கார் என்ற வீரரை விபற்றிய சரித்திர கதை இது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த பட அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ‘மரைக்கார்’ படத்தை தொடர்ந்து தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த தெலுங்கு படத்தை அறிமுக இயக்குனர் நரேந்திரநாத் இயக்க, இந்த படத்தை ‘ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் S.M.கொனேரு தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஃபிப்ரவரி) மாதம் துவங்க இருக்கிறது.

#KeerthiSureshMovieUpdate #KeerthiSuresh #MaheshSKoneru #Narendranath

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பைரவா - பட்டைய கெளப்பு பாடல் வீடியோ


;