தமிழில் வெளியாகும் ராம்சரண் படம்!

ராம்சரண் நடித்திருக்கும் ‘வினைய விதேய ராமா’ என்ற தெலுங்கு படம் தமிழிலும் வெளியாகிறது!

செய்திகள் 11-Jan-2019 4:43 PM IST Top 10 கருத்துக்கள்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம்சரண் நடிக்கும் படம் ‘வினைய விதேய ராமா’. மிகுந்த பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் போயப்பட்டி சீனு இயக்கியுள்ளார். ‘பாரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஹரீஷ் உத்தமன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் தெலுங்கு மொழியில் இன்று வெளியாகியது. குடும்ப பின்னணியில் காதல், அரசியல், சென்டிமென்ட், வன்முறை, சாகசம் என்று அனைத்து அம்சங்களும் அடங்கிய இந்த படத்திற்கு ஸ்ரீதேவி பிரசாத் இசை அமைக்க, ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, ‘பிரகாஷ் ஃபிலிம்ஸ்’ வழங்கும் ‘வினைய விதேய ராமா’ ஃபிப்ரவரி முதல் வாரம் தமிழ் மொழியிலும் தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாக இருக்கிறது.

#RamCharan #NTR #DSP #RaviVarma #VinayaVidheyaRama #VVD #DVVEntertainment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ


;