பாலிவுட்டில் கால்பதிக்கும் ஜீவா!

’1983 வேர்ல்ட் கப்’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதிக்கிறார் ஜீவா!

செய்திகள் 12-Jan-2019 10:36 AM IST Top 10 கருத்துக்கள்

காளீஸ் இயக்கத்தில் ‘கீ’, ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜிபிஸி’, டான் சாண்டி இயக்கத்தில் ‘கொரில்லா’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஜீவா, ‘சூப்பர்குட் பிலிம்ஸின்’ 90-அவது படமாக உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக அருள்நிதி நடிக்க, இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து ஜீவா ஒரு ஹிந்தி படத்திலும் நடிக்கிறார். ‘1983 வேர்ல்ட் கப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார் ஜீவா. 1983-ல் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா வேர்ல்ட் கப் பெற்று பெருமை சேர்த்த விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம் ‘1983 வேர்ல்ட் கப்’. இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விரைவில் நடைபெற இருக்கிறதாம்.

#Jiiva #Gorilla #Gypsy

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;